Wednesday, December 30, 2015

Unakaga  endrume inaiyatha kadikarathin neram parthu kathirukiren. Unathu ethir parpum athuvagave irukum bothu endrume ippadiyae irukka aasai.   Kadikara oosai varamalae povathu pol UN varavum...


Sunday, December 29, 2013

தாயுமானவன் 

சிறு வயதில் 

உடல் நலமின்றி  தந்தை மடி தேடி படுத்தேன்....

இன்று 

அப்பாவின் உடல் வலிக்கு மருந்து தேய்க்கிறேன்....

இரண்டிலுமே நான் உணரும் ஒரே உணர்ச்சி

தாய்மை ''''........... 

(அனைத்து பெண் குழந்தைகளுக்கும் )

Saturday, December 28, 2013

தூரங்களும் நேரங்களும் 
கடந்து போயின 
உன் அருகே நன் நடந்து செல்லும் போது ............

####Chumma yosichathu,.,.,.

Saturday, July 14, 2012

நீ என்னவன் இல்லை என்பது எனக்கு தெரியும் ....
உன்னுடனான எனது நினைவுகளே போதும் நான் உயிர் வாழ்வதற்கு.



Sunday, March 27, 2011

வறுமையின்  தாகம் !!!

அடுத்தவர் தாகம் தீர்க்க


இளநீர் விற்றவன்


நீராகாரம் அருந்தினான் 


தன் தாகம் தீர்க்க........



Tuesday, November 30, 2010

நட்பு!



நட்பு
ஹலோ சொல்லி அந்நியமாய் இணைந்தோம்
ஹாய் சொல்லி கண்ணியமாய் பழகினோம்
சின்ன சின்ன ஊடல்கள்
நம் நட்பில் வருவதுண்டு
செல்ல செல்ல வார்த்தைகளால் தடம் தெரியாது மறைவதுண்டு
நட்பிற்காக உயிரையே கொடுக்கலாம்
அது பழமொழி!
உயிரையே நட்பாக கொள்வது

இது புது மொழி
                                                                                                                                                                                                          
நட்பென்றால்

தவறு அவர் மீதே இருந்தாலும் கூட

காலில் விழுகலாம் !

என்று சொல்லி நட்பின் மேன்மையை

உணர வைத்தது நம் நட்பு

தெய்வங்களுக்கும்,பெரியவர்களுக்கும் மட்டுமே

குனிய  வேண்டிய என் சிரசை

நட்பின் தவறை திருத்துவதற்கும்

வளைக்கலாம் என்றாயே!!!

தோழியே

தெய்வங்களை விட ஒரு படி மேல்தான் நம் நட்பு!

படிக்கிறோமோ இல்லையோ

கை குலுக்கி வாழ்த்துக்கள்

பரிமாறும் நம் செமஸ்டர் தேர்வுகள்!

நாம் அடிக்கும் அரட்டையில் 

தேர்வுத் தாளே பயந்து ஓடிவிடும்!

நாம் வகுப்பறை விட

அதிக பிரச்சனைகளை

நாம் தீர்த்துக் கொண்ட கான்டீன்!

நான் வேண்டாம் நீ வேண்டாம் என்று சொல்லி

இறுதியில் நால்வருமே முதலில் நிற்போம்

நாம் கல்லூரி விழாக்களில்!


கால தேவனுக்கு காலே வலித்திருக்கும்

நாம் உரையாடல்களின் வேகத்தோடு போட்டி போட்டு!

நட்பே!

நம் நட்பை தாமரை மலரோடு
இணைத்துப் பார்க்க மாட்டேன்!

அது
நீரின் தன்மைக்கு ஏற்ப தான் உயரும்!
நாம் நட்பு சூரியனைப் போன்றது

நீ எதிர் பார்க்கிறாயோ இல்லையோ
என் நட்பு தினந்தோறும்
பூமியாகிய உன்னைச் சுற்றி சுற்றி வரும்!
நான் தாமரை மலர் அல்ல!
அதனையும் உயிர்க்க வைக்கும் சூரியன்!

அடுக்கி கொண்டே போகலாம்
நம் நட்பின் இனிய பொழுதுகளை?

நாம் நட்பு என்ன
எண்ணி எண்ணிப் பார்க்கும் காலச் சுவடுகளா?
இறுதிவரை நம் உயிருடன் பயணிக்கும்
சுவாசக் காற்றல்லவா அது!!!!!!!!!!!

Wednesday, October 27, 2010

சர்வ வல்லமை பெறத்துடிக்கும் காதற்பறவை......!!



♫♫♫
தொடுவானம்
தொடும் மேகம்

வானம் நான்.. வண்ணம் நீ..!
மேகம் நான்.. மின்னல் நீ..!
பறவை நான்.. சிறகு நீ..!

தொடுவேன் வண்ணம் தொடுவேன்..!
பிழிவேன் மின்னல் பிழிவேன்..!

புஜ்ஜு குட்டி... செல்ல குட்டி.. உம்ம்மா...