Wednesday, September 15, 2010

மனிதம் மதிக்கப்படுமா???


மனிதம் மதிக்கப்படுமா???

மனிதம் மறக்கப்பட்ட ஒரு வார்த்தை
மானுடமே ஊன் உடலிற்கு ஆசைப்பட்டு
மறந்து போனதொரு வார்த்தை

"தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் மூச்சு "
என்ற வரிகளை மறந்து
"தன்னலம் காக்க தமிழ் ஈழத்தை வதைக்கும்"
சிங்களச் சிப்பாய்களுக்கு தெரியுமா?
மனிதம் என்னவென்று??!!

"ஈகை குணத்திற்கு பெயர் பெற்ற இம் மண்ணில்"
யாரும் வருகிறார்களோ என்று.........
கதவடைத்து சாப்பிடும் கனவங்களுக்குத்  தெரியுமா???
மனிதம் என்னவென்று??!!

"முழு நிலக் காட்டிச் சொருடி வளர்த்து
முது கலைகளிலும் பட்டம் வாங்க வாய்த்த பெற்றோர்களை....."
முதியோர் இல்லத்தில் சேர்க்கும்
முட்டாள் பிள்ளைக்கு தெரியுமா??!!
மனிதம் என்னவென்று??!!
அன்று
"காந்தியடிகள் கண்ட மனிதம்...
அனைவரும் அமைதி காண்பதில் இருந்தது...."
"பாரதி கண்ட மனிதம்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவிப்பதில் இருந்தது..."

இன்று
"அணு சோதனை நடத்தி
அமைதியை குலைக்கும் நாடுகளுக்கும்....."
"கல்விக் கூடத்தை
காசு பார்க்கும் கேளிக்கை கூடமாக்கிய.....
கல்வியாளர்களுக்கு தெரியுமா??!!
மனிதம் என்னவென்று??!!

"மனிதம் என்றல் என்னவென்றே தெரியாத இச்சமுதாயத்தில்...
மனிதம் மதிக்கப் படாமல் கூட இருக்கலாம்........
மிதிக்கப் படமலாவது காக்க வேண்டும்!!!!!!!

10 comments:

சிவாஜி சங்கர் said...

முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் தங்கச்சி...!!
தொடர்ந்து இதுபோல நல்ல எண்ணங்களை நல்ல தமிழில் எழுத்து..

வினோ said...

சிந்தியா, அருமையான கவிதை..
வாழ்த்துக்கள்.. முதல் பதிவு.. தொரடர்ந்து வருகிறேன்..
கவிதையில் சில மாற்றங்கள் வேண்டும் என்று நினைக்கிறேன்..

சிந்தியா said...

siva anna romba nandri.....

kandippa matrangal kondu varuven vino.

Ahamed irshad said...

umm..

சிந்தியா said...

Thank You அஹமது இர்ஷாத்

நேசமித்ரன் said...

வாழ்த்துகள்!

ஹேமா said...

முதல் வணக்கம் சிந்து.அழகான உண்ர்ச்சிமிக்க கவிதை.
பிடிச்சிருக்கு.மனிதம் இருக்குதா என்கிறதே கேள்வி.இருந்தால்தானே மிதிக்கவும் மதிக்கவும் !

அடிக்கடி சந்திக்கலாம் இனி !

கவிநா... said...

வாழ்த்துக்கள்... நல்லா இருக்கு சிந்தியா...

thendralsaravanan said...

மனிதம்... நினைத்துப் பார்க்க மனிதன் இல்லை...கவிதைகள் அனைத்தும் அழகாக வருகிறது.வாழ்த்துகள்.

Anonymous said...

மனிதம் தொலைந்து நாட்கள் பல கடந்து விட்டது....கவிதை தொடர வாழ்த்துக்கள்