Monday, October 11, 2010

மௌனங்களில் சிக்கி இருந்தன சொற்கள்..

 
*
இருளுக்கான  இடைவெளி நீள்கையில்
இமைகளுக்கான இடைவெளி குறைகிறது..!!

*
உன் கனவிற்கும்
என் கனவிற்கும்
இடையே

துயில்கிறது..

வாழ்வதாக
நாம்
சொல்லித் திரியும் வாழ்க்கை..!

*
மருதாணி சிவப்பது பற்றி
சொல்லிக்கொண்டிருந்தேன்..

கடற்கரையில் நீ இருந்து
கேட்டுக்கொண்டிருந்தாய்..

அலைகள் இரைச்சலிட்டு கொண்டிருந்தது..
நீ அலைகளை பார்த்துக்கொண்டிருந்தாய்..

நான் உன்னை முறைத்தேன்..

அலைகள் மௌனித்துக் கொண்டன..!

வானம் மருதாணி பூசிக்கொண்டது..

*
பாண்டி ஆட்டத்தின் கட்டங்களை

மிதிக்காது கடந்தாய்..

கட்டங்களும் கடந்து கொண்டிருந்தது

மிதிபடாமல்..


*
கை நிறைய மேகம் வைத்திருந்தாய்.,

தாகத்துடன் அலைகிறது வானம்..

நகக் கண்ணில் கோடிழுத்து

எதிர்ப்பை காட்டிச் சென்றது.,

வானம் கடக்கும் கொக்கு..!

15 comments:

வினோ said...

நல்லா இருக்கு சிந்தியா..
இன்னும் எழுதுங்கள் உங்கள் அண்ணனைப் போல

நேசமித்ரன் said...

வாழ்த்துகள்

பாலா said...

வாழ்த்துகள் சிவாஜி சாரி சாரி சிந்தியா

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஷ்ஷ்ஷ் ! எனக்கு ரொம்ப பிடித்தது முதல் இரு வரிக் குறள் தான்.அந்த படமும் கூட.

சிந்தியா said...

romba thanks nesa and bala bala anna sinthiya sivaji onnutha.....
pirichu pakka venam
romba nandri naykutti manasukku..............:-(

ஜெயசீலன் said...

நல்லா இருக்கு சிந்தியா... தொடர்ந்து எழுதுங்கள்...

//கை நிறைய மேகம் வைத்திருந்தாய்.,

தாகத்துடன் அலைகிறது வானம்..

நகக் கண்ணில் கோடிழுத்து

எதிர்ப்பை காட்டிச் சென்றது.,

வானம் கடக்கும் கொக்கு..!//

This is Excellent...

சிந்தியா said...

romba thanks jaya sir

சத்ரியன் said...

//நீ அலைகளை பார்த்துக்கொண்டிருந்தாய்..

நான் உன்னை முறைத்தேன்..

அலைகள் மௌனித்துக் கொண்டன..!

வானம் மருதாணி பூசிக்கொண்டது..//

மொறைச்சாலே பயந்துக்குற சுபாவமா அவருக்கு. அடப்பாவமே!

pichaikaaran said...

"இன்னும் எழுதுங்கள் உங்கள் அண்ணனைப் போல"

அவரைப்போல வேண்டாம்... உங்களுக்கென தனி பாணீ உருவாக்கி வருகிறீர்கள்..உங்களை போலவே எப்பொதும் எழுதுங்கள்

சிந்தியா said...

romba nandri sathriyian
and parvayalan anna..........

கார்த்திகேயன் said...

வலை உலகம் உங்களை எடுத்துச் சூடிக்கொள்ளப் போகிறது கூடிய விரைவில்.என் வாழ்த்துக்கள் உங்களோடு.

விஜய் said...

வாவ்

அருமை சகோ

வாழ்த்துக்கள்

விஜய்

சிந்தியா said...

romba nandri karthick and vijay...
all are siva anna training

மே. இசக்கிமுத்து said...

உங்கள் கவிதை வரிகள் நன்றாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!!

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு