Tuesday, November 30, 2010

நட்பு!



நட்பு
ஹலோ சொல்லி அந்நியமாய் இணைந்தோம்
ஹாய் சொல்லி கண்ணியமாய் பழகினோம்
சின்ன சின்ன ஊடல்கள்
நம் நட்பில் வருவதுண்டு
செல்ல செல்ல வார்த்தைகளால் தடம் தெரியாது மறைவதுண்டு
நட்பிற்காக உயிரையே கொடுக்கலாம்
அது பழமொழி!
உயிரையே நட்பாக கொள்வது

இது புது மொழி
                                                                                                                                                                                                          
நட்பென்றால்

தவறு அவர் மீதே இருந்தாலும் கூட

காலில் விழுகலாம் !

என்று சொல்லி நட்பின் மேன்மையை

உணர வைத்தது நம் நட்பு

தெய்வங்களுக்கும்,பெரியவர்களுக்கும் மட்டுமே

குனிய  வேண்டிய என் சிரசை

நட்பின் தவறை திருத்துவதற்கும்

வளைக்கலாம் என்றாயே!!!

தோழியே

தெய்வங்களை விட ஒரு படி மேல்தான் நம் நட்பு!

படிக்கிறோமோ இல்லையோ

கை குலுக்கி வாழ்த்துக்கள்

பரிமாறும் நம் செமஸ்டர் தேர்வுகள்!

நாம் அடிக்கும் அரட்டையில் 

தேர்வுத் தாளே பயந்து ஓடிவிடும்!

நாம் வகுப்பறை விட

அதிக பிரச்சனைகளை

நாம் தீர்த்துக் கொண்ட கான்டீன்!

நான் வேண்டாம் நீ வேண்டாம் என்று சொல்லி

இறுதியில் நால்வருமே முதலில் நிற்போம்

நாம் கல்லூரி விழாக்களில்!


கால தேவனுக்கு காலே வலித்திருக்கும்

நாம் உரையாடல்களின் வேகத்தோடு போட்டி போட்டு!

நட்பே!

நம் நட்பை தாமரை மலரோடு
இணைத்துப் பார்க்க மாட்டேன்!

அது
நீரின் தன்மைக்கு ஏற்ப தான் உயரும்!
நாம் நட்பு சூரியனைப் போன்றது

நீ எதிர் பார்க்கிறாயோ இல்லையோ
என் நட்பு தினந்தோறும்
பூமியாகிய உன்னைச் சுற்றி சுற்றி வரும்!
நான் தாமரை மலர் அல்ல!
அதனையும் உயிர்க்க வைக்கும் சூரியன்!

அடுக்கி கொண்டே போகலாம்
நம் நட்பின் இனிய பொழுதுகளை?

நாம் நட்பு என்ன
எண்ணி எண்ணிப் பார்க்கும் காலச் சுவடுகளா?
இறுதிவரை நம் உயிருடன் பயணிக்கும்
சுவாசக் காற்றல்லவா அது!!!!!!!!!!!

Wednesday, October 27, 2010

சர்வ வல்லமை பெறத்துடிக்கும் காதற்பறவை......!!



♫♫♫
தொடுவானம்
தொடும் மேகம்

வானம் நான்.. வண்ணம் நீ..!
மேகம் நான்.. மின்னல் நீ..!
பறவை நான்.. சிறகு நீ..!

தொடுவேன் வண்ணம் தொடுவேன்..!
பிழிவேன் மின்னல் பிழிவேன்..!

புஜ்ஜு குட்டி... செல்ல குட்டி.. உம்ம்மா...




Monday, October 11, 2010

மௌனங்களில் சிக்கி இருந்தன சொற்கள்..

 
*
இருளுக்கான  இடைவெளி நீள்கையில்
இமைகளுக்கான இடைவெளி குறைகிறது..!!

*
உன் கனவிற்கும்
என் கனவிற்கும்
இடையே

துயில்கிறது..

வாழ்வதாக
நாம்
சொல்லித் திரியும் வாழ்க்கை..!

*
மருதாணி சிவப்பது பற்றி
சொல்லிக்கொண்டிருந்தேன்..

கடற்கரையில் நீ இருந்து
கேட்டுக்கொண்டிருந்தாய்..

அலைகள் இரைச்சலிட்டு கொண்டிருந்தது..
நீ அலைகளை பார்த்துக்கொண்டிருந்தாய்..

நான் உன்னை முறைத்தேன்..

அலைகள் மௌனித்துக் கொண்டன..!

வானம் மருதாணி பூசிக்கொண்டது..

*
பாண்டி ஆட்டத்தின் கட்டங்களை

மிதிக்காது கடந்தாய்..

கட்டங்களும் கடந்து கொண்டிருந்தது

மிதிபடாமல்..


*
கை நிறைய மேகம் வைத்திருந்தாய்.,

தாகத்துடன் அலைகிறது வானம்..

நகக் கண்ணில் கோடிழுத்து

எதிர்ப்பை காட்டிச் சென்றது.,

வானம் கடக்கும் கொக்கு..!

Wednesday, September 15, 2010

மனிதம் மதிக்கப்படுமா???


மனிதம் மதிக்கப்படுமா???

மனிதம் மறக்கப்பட்ட ஒரு வார்த்தை
மானுடமே ஊன் உடலிற்கு ஆசைப்பட்டு
மறந்து போனதொரு வார்த்தை

"தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் மூச்சு "
என்ற வரிகளை மறந்து
"தன்னலம் காக்க தமிழ் ஈழத்தை வதைக்கும்"
சிங்களச் சிப்பாய்களுக்கு தெரியுமா?
மனிதம் என்னவென்று??!!

"ஈகை குணத்திற்கு பெயர் பெற்ற இம் மண்ணில்"
யாரும் வருகிறார்களோ என்று.........
கதவடைத்து சாப்பிடும் கனவங்களுக்குத்  தெரியுமா???
மனிதம் என்னவென்று??!!

"முழு நிலக் காட்டிச் சொருடி வளர்த்து
முது கலைகளிலும் பட்டம் வாங்க வாய்த்த பெற்றோர்களை....."
முதியோர் இல்லத்தில் சேர்க்கும்
முட்டாள் பிள்ளைக்கு தெரியுமா??!!
மனிதம் என்னவென்று??!!
அன்று
"காந்தியடிகள் கண்ட மனிதம்...
அனைவரும் அமைதி காண்பதில் இருந்தது...."
"பாரதி கண்ட மனிதம்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவிப்பதில் இருந்தது..."

இன்று
"அணு சோதனை நடத்தி
அமைதியை குலைக்கும் நாடுகளுக்கும்....."
"கல்விக் கூடத்தை
காசு பார்க்கும் கேளிக்கை கூடமாக்கிய.....
கல்வியாளர்களுக்கு தெரியுமா??!!
மனிதம் என்னவென்று??!!

"மனிதம் என்றல் என்னவென்றே தெரியாத இச்சமுதாயத்தில்...
மனிதம் மதிக்கப் படாமல் கூட இருக்கலாம்........
மிதிக்கப் படமலாவது காக்க வேண்டும்!!!!!!!

Friday, September 3, 2010

அன்னமும் அன்றிலும்..!!


முன்பு இருந்தது....!!