Tuesday, November 30, 2010

நட்பு!



நட்பு
ஹலோ சொல்லி அந்நியமாய் இணைந்தோம்
ஹாய் சொல்லி கண்ணியமாய் பழகினோம்
சின்ன சின்ன ஊடல்கள்
நம் நட்பில் வருவதுண்டு
செல்ல செல்ல வார்த்தைகளால் தடம் தெரியாது மறைவதுண்டு
நட்பிற்காக உயிரையே கொடுக்கலாம்
அது பழமொழி!
உயிரையே நட்பாக கொள்வது

இது புது மொழி
                                                                                                                                                                                                          
நட்பென்றால்

தவறு அவர் மீதே இருந்தாலும் கூட

காலில் விழுகலாம் !

என்று சொல்லி நட்பின் மேன்மையை

உணர வைத்தது நம் நட்பு

தெய்வங்களுக்கும்,பெரியவர்களுக்கும் மட்டுமே

குனிய  வேண்டிய என் சிரசை

நட்பின் தவறை திருத்துவதற்கும்

வளைக்கலாம் என்றாயே!!!

தோழியே

தெய்வங்களை விட ஒரு படி மேல்தான் நம் நட்பு!

படிக்கிறோமோ இல்லையோ

கை குலுக்கி வாழ்த்துக்கள்

பரிமாறும் நம் செமஸ்டர் தேர்வுகள்!

நாம் அடிக்கும் அரட்டையில் 

தேர்வுத் தாளே பயந்து ஓடிவிடும்!

நாம் வகுப்பறை விட

அதிக பிரச்சனைகளை

நாம் தீர்த்துக் கொண்ட கான்டீன்!

நான் வேண்டாம் நீ வேண்டாம் என்று சொல்லி

இறுதியில் நால்வருமே முதலில் நிற்போம்

நாம் கல்லூரி விழாக்களில்!


கால தேவனுக்கு காலே வலித்திருக்கும்

நாம் உரையாடல்களின் வேகத்தோடு போட்டி போட்டு!

நட்பே!

நம் நட்பை தாமரை மலரோடு
இணைத்துப் பார்க்க மாட்டேன்!

அது
நீரின் தன்மைக்கு ஏற்ப தான் உயரும்!
நாம் நட்பு சூரியனைப் போன்றது

நீ எதிர் பார்க்கிறாயோ இல்லையோ
என் நட்பு தினந்தோறும்
பூமியாகிய உன்னைச் சுற்றி சுற்றி வரும்!
நான் தாமரை மலர் அல்ல!
அதனையும் உயிர்க்க வைக்கும் சூரியன்!

அடுக்கி கொண்டே போகலாம்
நம் நட்பின் இனிய பொழுதுகளை?

நாம் நட்பு என்ன
எண்ணி எண்ணிப் பார்க்கும் காலச் சுவடுகளா?
இறுதிவரை நம் உயிருடன் பயணிக்கும்
சுவாசக் காற்றல்லவா அது!!!!!!!!!!!

13 comments:

வினோ said...

:)

போளூர் தயாநிதி said...

//முகநக நட்பது நட்பன்று ...
இது வள்ளுவம்
உங்களின் நட்பு
பலமோ அற்புதம்
பாராட்டுகள்
போளூர் தயாநிதி //

போளூர் தயாநிதி said...

//முகநக நட்பது நட்பன்று ...
இது வள்ளுவம்
உங்களின் நட்பு
பலமோ அற்புதம்
பாராட்டுகள்
போளூர் தயாநிதி //

சிந்தியா said...

mikka nandri thaya............

சிந்தியா said...

hi vino anna tnq na siva anna kitta enna pathi ketathuku nandri unga comments ku...........

Ramesh said...

அழகான கவிதை சிந்தியா அவர்களே :-p


அன்புக்கு இனிய
உறவுகள் ஆயிரம்
வந்தாலும் தோழி
உனக்கு ஈடு இணை எவரும் இல்லை
உன் நட்புக்கு விலை இந்த உலகில் இல்லை..
சுவாசமே நட்பாய்
நேசிக்க மறந்தாலும்
உன் அன்பை சுவாசிக்க மறக்காது என் நெஞ்சம் ..

என்றும் நட்புடன் .. ;)

சிந்தியா said...

hey rami tnq da....................

சிவாஜி சங்கர் said...

:-)

சிந்தியா said...

;-) anna................

அன்புடன் நான் said...

இந்த பதிவில் இரண்டாம் படம் மிக அழகுங்க ...
படங்கள் ஒரே அளவில் இருந்தா பார்க்க வடிவா இருக்கும் ....
கவிதையை இன்னும் சுருக்கமா எழுதினா மனசில நச்சின்னு நிக்கும்
இதை நான் நட்போட சொல்லுறதா எடுத்துக்கங்க.... நன்றி

உங்களின் ஆர்வத்துக்கு என் பாராட்டுக்குள்.

அன்புடன் நான் said...

உங்க வலைப்பதிவோட தலைப்பு மிக அருமைங்க .... வாழ்த்துக்கள்.

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

தாமரைச்செல்வன் .ர said...

என் அன்புக்குரியவளே !!!! எனக்கு பொய் சொல்ல தெரியாது எனவே தான் தோழி என்று அழைக்கவில்லை ... உன்னுடைய கவிதைகள் அனைத்தும் உன்னை போலவே அழகாக உள்ளது !! நான் இப்பொழுது உன்னுடைய தீவிர ரசிகன் என் அன்புக்குரியவளே!!!! நீ என்னை வெகுவாக கவர்ந்து விட்டாய் என்னவளே !!!!
என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் !!!
தொலைந்த இடம் அது எந்த இடம் அந்த இடம் சிந்தியா ப்ளாக் -இல்
வாய் மொழியும் என் தாய் மொழியும் இன்று வாச படவில்லையடி !!!